மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள் (Student Development Programme on Kanithamizh functions in Python Language)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக * மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள் (Student Development Programme on Kanithamizh functions in Python Language)* எனும் பொருண்மையிலான பயிற்சி 13, 14.4.2021 ஆகிய இரண்டு நாட்கள் 3.00 முதல் 4.00 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். பயிற்றுநராகத் திருமிகு *க. சண்முகம்* (உதவிப்பேராசிரியர் & தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர், கணினிப் பயன்பாட்டியல் பொறியியல் துறை, எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார். அந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு மின்சான்றிதழ் உண்டு. இதில் கலந்துகொள்ள பதிவுசெய்தல் வேண்டும். *இறுதி நாள் : 06.4.2021* பதிவுசெய்ய :- https://forms.gle/PH9EqX6EZoorhwL2A