பெண்ணே
காலையில் கதிரவன் உதிக்கும்முன்
கடாரம் கொண்ட போரொலி
காதை நிரப்ப
கழுவுவாள் பாத்திரங்களை
அடுமனைக்குள் அமைதியாக
தாய்வழிச் சமுதாயம்
தந்தைவழிச் சமுதாயமாய்
மாறியதன் வெளிப்பாடு
கொற்றவையை வறுமைக்குள்
காட்சிப்படுத்துவர்
தாழ்வு எண்ணம் கொண்டார்
தவிடு பொடியாய்ப் பேசுவர்
தாமிரத் தொண்டை கிழிய
பெண்ணியம் கூறி
அடுத்த நாழிகை
அழகு பதுமையாக
அடுத்தவர்முன் நிற்பதே
அவருக்கு அழகு
அவர்களது எண்ணம்.
காலம் கடந்து சென்றாலும்
காட்சிகள் மாறினாலும்
ஆழ்மனதிற்குள் பதிந்த
அடிமையிலிருந்து விடுபட
மனம் தயங்கும்
ஆகா.... ஆகா.....
படித்தும் பட்டம் பெறும்
பரப்புரை செய்வது ஏனோ
அடுத்தவர் அந்தரங்கத்தை
அதிலொரு ஆட்சி
அவர்களுக்கு
ஆனால்
அனைத்துத் துறைகளில்
ஆட்சியைப் பிடித்தாலும்
அடிமை மோகம் மட்டும்
அடிக்கொரு முறை
வந்து வந்து
ஞாயிறு ஒளிர்வதாய்
ஒளி பாய்ச்சிச்
செல்கிறது
நிற்க
பெண்ணே
அகண்ட உலகை
அறிவால் விழுங்கு
ஆறறிவு அறி
ஆற்றல்சால் சிந்தை ஆக்கு
கண்டோர் அலர் நீக்கு
படி அனுதினமும்
கல் கண்டதை...
- நேயக்கோ
Comments
Post a Comment