Posts

Showing posts from February, 2021

தமிழில் ஒருங்குறி தட்டச்சு முறைகள்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ் மன்றம் சார்பாக, வருகிற 26, 27. 2. 2021 ஆகிய இரு நாட்கள் பிற்பகல் 2 - 3 மணி வரை கணித்தமிழ்ப் பயிற்சிகள் (ஒருங்குறி தட்டச்சு முறைகள், விக்கிமூலம் - கவிதை மெய்ப்புப் பார்த்தல்) வழங்கப்பெற உள்ளன. அதில் கலந்துகொள்ள https://meet.google.com/uik-jjxw-wnv இவண் கணித்தமிழ் மன்ற ஒருங்கிணைப்புக் குழு

தமிழியல் ஆய்வுகள் : அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்

தமிழாய்வுத்துறை - பிஷப் ஹீபர் கல்லூரி & 'இனம்' பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் இணைந்து நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் :   *"தமிழியல் ஆய்வுகள் : அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்"*  நாள் : *22.2.2021* (திங்கட்கிழமை) இந்திய நேரம் : பிற்பகல் 2.00 - 4.30 தடம் : *Zoom*  https://us02web.zoom.us/j/82721473444?pwd=bWpWaEIyZUtoUDZpdnZmRXpRUkF3UT09 Meeting ID: 827 2147 3444 Passcode: 756703 பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.  அழைப்பின் மகிழ்வில், *தமிழாய்வுத்துறைத் தலைவர் மற்றும்  துறைப் பேராசிரியர்கள்*  பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சி.

இணைய யுகமும் தமிழும்

இணைய யுகமும் தமிழும் எனும் பொருண்மையில் சரவணம்பட்டி, பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கணித்தமிழ் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க எழுதிகள், எழுத்துரு மாற்றி, கைன் மாசிடர், கூகுள் படிவம், மின் சான்றிதழ், விக்கித் திட்டங்கள் என அமைத்துக் கொண்டேன். அன்பான வரவேற்பு முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்த்துறைப் பேராசிரியர், பங்கேற்பாளர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்தது..