கொங்குநாடும் தொல்லியலும்
நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி- தமிழ்த்துறையின் "தொல்லியல் மன்றம்" சார்பில் "கொங்குநாடும் தொல்லியலும்" (கொங்குநாட்டு தொல்லியல் பதிவுகள்) எனும் பொருண்மையிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்க நிகழ்வை தமிழ்த்துறைப் பேராசிரியர் அ.சுமதி அவர்கள் வரவேற்புரை வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.
"கொங்கு நாடும் தொல்லியலும்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, பிரபல தொல்லியல் ஆய்வாளர், தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், முனைவர் நித்தியானந்த பாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழகத் தொல்லியலில் கொங்குநாட்டின் பெரும்பங்கு எத்தகையது என்பது பற்றியும், கொங்குநாட்டின் பண்டைய கால வாணிபம், பெருவழிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சித்திரங்கள்,
கைவினைப் பொருட்கள்,
சுடுமண் சிதைகள், கோவில்கள், சிற்பங்கள், மற்றும் கொங்குநாட்டு மக்கள் வாழ்க்கை முறை ஆகியன பற்றி மிகவும் தெளிவாக ஆவணங்களுடன் விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்வு அனைவருக்கும் மிகவும் அருமையான பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.
பேரா.அ.சுமதி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பேரா முனைவர் ம.மைதிலி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பேரா.கா.விக்னேஷ் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்விற்கு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment