உலக மகிழ்ச்சி தினம்
"உலக மகிழ்ச்சி தினம்"
நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி- தமிழ்த்துறையின் சிரிப்போம் சிந்திப்போம் மன்றம் சார்பில் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கி, நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.
"மாற்றுக்குரல் மகா சங்கமம்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, பிரபல தொலைக்காட்சி புகழ் மிமிக்கிரி கலைஞர் ஆ.ஆனந்தாழ்வார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடித்த பல சாதனை நட்சத்திரங்களின் குரல்களில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நகைச்சுவை வாயிலாகக் கூறி அனைவரையும் மகிழ்வித்தார்...
தமிழ்த்துறைப் பேராசிரியர் கா.விக்னேஷ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்விற்கு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment