தமிழர் பண்பாட்டு மரபில் கோயிற்கலை

நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் "தமிழர் பண்பாட்டு மன்றம்" சார்பில் "தமிழர் பண்பாட்டில் கோயிற்கலை" (சிறப்புக் கருத்தரங்கம்) எனும் பொருண்மையிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார்.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

"தமிழர் பண்பாட்டில் கோயிற்கலை" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு,பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ச.கோகுல் கிருஷ்ணன்  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழகம் மற்றும் கொங்குநாட்டுக் கோயில்களின் தனிச்சிறப்புக்களையும், மூலவர் முதல் பரிவார தெய்வங்கள் வரை சுவாமி சிலைகளின் சிறப்பம்சங்களையும், சிற்பம், குடைவரைக் கோயில்கள், குகைக் கோயில்கள், கோபுரம், விமானம் ஆகிய பகுதிகளின் சிறப்பம்சங்களை மிகவும் அருமையாக தெளிவாக விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்வு அனைவருக்கும் மிகவும்  அருமையான பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

பேரா.முனைவர் ம.மைதிலி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

மாணவி இலக்கியா
(I BA Eng) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
மாணவி ரேணுகாதேவி (I B.Com PA B) அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார்.மாணவன் கணேஷ் முருகன்(IB.Com PA A)தொகுத்து வழங்கினார்.மாணவி பிரியங்கா (IB.Com PA B) நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)