Posts

Showing posts from June, 2020

வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி நாள்-2

Image
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவி பெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, குழுவுக்கு ஒரு பயிற்றுநர் மூலம் இன்று பயிற்றுவிக்கப்பட்டது. இன்றைய பயிலரங்கு வகுப்பில் 70 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் பயிற்சியில் வலைப்பூ உருவாக்குதல்(creating a New Blog), வலைப்பூவிற்கான இணைப்பு உருவாக்குதல்(creating a Blog url), கிராலர் மற்றும் அட்டவணைப்படுத்துதல் அமைவுகள்(crawlers and indexing tag setting), கருத்துரை அமைவு(comment capture and settings), மின்னஞ்சல் மூலம் பதிவிடுதல்(posting via e-mail) மெட்டா ஒட்டுகள்(meta tags), எழுத்தர்களை அழைத்தல்(invite authers),404 error போன்றவற்றை மாற்றி அமைப்பது பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது. இப்பயிலரங்கை முனைவர் த.சத்தியராஜ் & திருமதி கு.இராமஜெயம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தயாரிப்பு;- செல்வன் ம...

வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி தொடக்கவிழா & பயிற்சி நாள்-1

Image
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவி பெற்று, கணித்தமிழ்ப் பேரவையை நிறுவி, அதன் இரண்டாவது நிகழ்வாக வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி எனும் பொருண்மையில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அப்பயிலரங்கத்தின் தொடக்க விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வன் மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அம்மா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி, இது போன்ற பயிற்சிகள் தந்து தமிழில் வலைப்பூ நிரம்ப உருவாக்கித் தமிழ்த் தரவுத் தளத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறி மாணவப் பயிற்றுநர்களை ஆற்றுப்படுத்தினார்கள். மாணவர்களின் இம்முயற்சியைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்களும் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் க.கீதா அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில்  கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.அருண்குமார் கணித் தமிழ்ப் பேரவையின் செயல்பாடுகளைக் கூறினார்கள். நிகழ்வின் இறுதியில் செல்வி ரேஷ்மா அவர்கள்...