Posts

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)

கோவை ,  ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின்    கணித்தமிழ்   மன் றத்தின் சார்பாக * இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள்  ( Cyber Crime and Cyber Ethics)*  எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கம்   05.05.2021 புதன் கிழமையன்று    காலை  11.00  மணி   மு தல்   நண்பகல்  12.00  மணி   வரை   நடை பெறவுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள்.   சிறப்பு விருந்தினராக  முனைவர் சி.திருமால்அழகன்   ( உதவிப்பேராசிரியர்(SG ) ,  மேலாண்மைக்கல்வி, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி)  அவர்கள் கலந்து கொண்டு   சிறப்புரை வழங்க   உள்ளார்.  இ ந்நிகழ்வில் கலந்துகொண்டு  பயன்பெறுமாறு பேராசிரியர்களையும் மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.   கூகுள் இணைப்பு   :- https://meet.google.com/uik- jjxw-wnv  

சின்னக் கலைவாணருக்கு கவிதாஞ்சலி

அனைவருக்கும் வணக்கம்.நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி -  தமிழ்த்துறையின் சிரிப்போம் சிந்திப்போம் மன்றம் சார்பில், மறைந்த நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "சின்னக் கலைவாணருக்கு கவிதாஞ்சலி"  எனும் பொருண்மையிலான சிறப்புக் கவியரங்கம் நடைபெறவுள்ளது. வரும் 28.04.2021 (புதன்கிழமை) காலை 11 மணியளவில் இணைய வழியில் நடைபெறும் இக்கவியரங்கில் நீங்களும் கவிதை வாசிக்கலாம்! கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து உங்களின் கவிதாஞ்சலியை சின்னக் கலைவாணருக்குச் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்! கவியரங்கத் தலைப்புகள் 👇 1. நகைச்சுவைக்கு அப்பால்...... 2. மண்ணின் மைந்தன்.... 3. இயற்கை மைந்தன்! 4. சிரிப்பும் சிந்தனையும்... நிகழ்வில் இணைய https://meet.google.com/lookup/cvhvg4gobv

மாணவர்களின் கலை கதம்பம்

நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் "தமிழர் பண்பாட்டு மன்றம்" சார்பில் "மாணவர்களின் கலை கதம்பம்" எனும் பொருண்மையிலான சிறப்புக் கலையரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நம் கல்லூரி  முதல்வர் முனைவர் செ. பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். மாணவர்களின் திறமையான இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் சங்கமிக்கும் நிகழ்வாக அமைந்தது  இந்நிகழ்வு அனைவருக்கும் மிகவும்  அருமையான பயனுள்ள நிகழ்வாக அமைந்தது மட்டும் அல்லாமல் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை தூண்டும் தூண்டுகோளாகவும் இருந்தது  பேரா.முனைவர் ம.மைதிலி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரையையும் வழங்கினார்  பேரா க.விக்னேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்  இந்நிகழ்விற்கு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

தமிழர் பண்பாட்டில் திரைக் கலை

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தமிழர் பண்பாட்டு மன்றம் சார்பாகத் தமிழர் பண்பாட்டில் திரைக் கலை எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கம் இன்று 12 மணியளவில் நடைபெற உள்ளது.அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கவும்... நிகழ்வில் இணைய:- https://meet.google.com/lookup/g77wimubl3 அனைவரும் வருக! பயன் பெறுக!

தூய்மை இந்தியா இயக்கம் - அறிமுகம் (Introduction to Swacch Bhaarath)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்  சார்பாக * தூய்மை இந்தியா இயக்கம் - அறிமுகம் (Introduction to Swacch Bhaarath)* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 19.4.2021 முதல் 20.4.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது. *  *மின்சான்றிதழ் உண்டு* *  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்* * *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது👇🏿* https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBzq1NopLOkfA8ru3gLkx2J0OyHuITrpSQZkUYCCRa8ztABQ/viewform

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக * மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள் (Student Development Programme on Kanithamizh functions in Python Language)* எனும் பொருண்மையிலான பயிற்சி 13, 14.4.2021 ஆகிய இரண்டு நாட்கள் 3.00 முதல் 4.00 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை நல்கினார்கள். பயிற்றுநராகத் திருமிகு *க. சண்முகம்* (உதவிப்பேராசிரியர் & தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர், கணினிப் பயன்பாட்டியல் பொறியியல் துறை, எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்கள். இப்பயிற்சியில் 75பேர்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுப் பயிற்சிபெற்றனர். இந்நிகழ்ச்சியை மாணவர் கணேஷ்முருகன் தொகுத்து வழங்க, மாணவி வெ. பிரியங்கா வரவேற்க, சிறப்புவிருந்தினரை மாணவி ரேணுகாதேவி அறிமும் செய்ய, மாணவர் ம.

Sri Krishna Adithya College : Student Development Program on Kanithamizh functions in Python Language

Student Development Program on Kanithamizh functions in Python Language on behalf of Kanithamizh peravai of Department of Tamil Department and Department of Computer Applications, Sri Krishna Aditya College of Arts and Science, Coimbatore, organized two days student development program on 13.4.2021 and , 14.4.2021.  Dr. S. Palaniyammal Principal delivered the keynote address. Dr. S. Selvanayaki, Head Department of Tamil gave his greetings. Dr. Shanmugam (Assistant Professor & Tamil Forum Coordinator, Department of Computer Application Engineering, SRM Valliyamai College of Engineering, Chennai) was the Guest trained More than 75 students on Python programming. The event was  hosted by   G. Ganesh Murugan of I B.com  Priyanka of I B.com (PA) welcomed the gathering and Renuka Devi of I Bcom introduce the special guest. M.Madhavaraj of II Bcom AF given the vote of thanks. The event was coordinated by Dr. T. Sathiyaraj and Prof.G.Ramajayam.