பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக * மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள் (Student Development Programme on Kanithamizh functions in Python Language)* எனும் பொருண்மையிலான பயிற்சி 13, 14.4.2021 ஆகிய இரண்டு நாட்கள் 3.00 முதல் 4.00 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை நல்கினார்கள். பயிற்றுநராகத் திருமிகு *க. சண்முகம்* (உதவிப்பேராசிரியர் & தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர், கணினிப் பயன்பாட்டியல் பொறியியல் துறை, எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்கள். இப்பயிற்சியில் 75பேர்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுப் பயிற்சிபெற்றனர். இந்நிகழ்ச்சியை மாணவர் கணேஷ்முருகன் தொகுத்து வழங்க, மாணவி வெ. பிரியங்கா வரவேற்க, சிறப்புவிருந்தினரை மாணவி ரேணுகாதேவி அறிமும் செய்ய, மாணவர் ம. மாதவராஜ் நன்றி நவில, முனைவர் த. சத்தியராஜ் அவர்களும் பேரா.கு.இராமஜெயம் அவர்களும் ஒருங்கிணைத்தார்கள்.

Comments

Popular posts from this blog

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)