மாணவர்களின் கலை கதம்பம்

நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் "தமிழர் பண்பாட்டு மன்றம்" சார்பில் "மாணவர்களின் கலை கதம்பம்" எனும் பொருண்மையிலான சிறப்புக் கலையரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நம் கல்லூரி  முதல்வர் முனைவர் செ. பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார்.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

மாணவர்களின் திறமையான இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் சங்கமிக்கும் நிகழ்வாக அமைந்தது 



இந்நிகழ்வு அனைவருக்கும் மிகவும்  அருமையான பயனுள்ள நிகழ்வாக அமைந்தது மட்டும் அல்லாமல் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை தூண்டும் தூண்டுகோளாகவும் இருந்தது 

பேரா.முனைவர் ம.மைதிலி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரையையும் வழங்கினார் 

பேரா க.விக்னேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார் 

இந்நிகழ்விற்கு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)