விக்கித் திட்டங்களில் எழுதும் முறை

எம் கல்லூரிக் கணித்தமிழ்ப் பேரவை நடத்திவரும் விக்கித் திட்டங்களில் எழுதும்முறை (17.8.2020 - 23.8.2020) பயிற்சியில் ஏழு முக்கியமான ஆளுமைகள் பங்குகொண்டு தங்களுடைய பயிற்சிகளின் மூலம் விக்கித் திட்டங்களைப் பற்றிய அறிமுகத்தையும் அதில் எழுதக்கூடிய நுட்பங்களையும் அளித்துள்ளார்கள்.

அவற்றுள் விக்கிமூலம், விக்கிப்பீடியா அறிமுகம், விக்கி இடைமுகம், விக்கி பொதுமுகம், விக்கி பொதுவகம், விக்சனரி, விக்கித்தொழில் நுட்பம் என அமைந்திருப்பது சிறப்புக்குரியதாக இருக்கிறது.

முதல் நாளில் திருமதி பார்வதிஸ்ரீ அவர்கள் கலந்துகொண்டு, விக்கிமூலம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இவர்கள் விக்கியின் செயல்பாட்டிற்காகப் பல்வேறு பதக்கங்களைப் பெற்று உள்ளார்கள். குறிப்பாகச் சிறந்த பரப்புரை செயல்பாட்டுக்கான பதக்கம், கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் என அவருடைய பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். அவர் விக்கிமூலம் குறித்து ஒரு பயிற்சி தந்தமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இண்டாம் நாளில் திரு.ஹிபயதுல்லா அவர்கள் கலந்து கொண்டு விக்கிப்பீடியா அறிமுகத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.

மூன்றாம் நாளில் திரு.ஸ்ரீதர் அவர்கள் கலந்து கொண்டு விக்கி இடைமுகம் குறித்துப் பயிற்சியளித்துள்ளார்கள். அவர்கள் விக்கித்திட்டத்தில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே மாதிரி திரு. மகாலிங்கம் அவர்கள் நான்காம் நாளில் கலந்து கொண்டு விக்கிப் பொதுமுகம் பற்றிப் பயிற்சி தந்துள்ளார்கள். அவர்கள் வேதிவினை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து தந்தமைக்காகப் பதக்கம் பெற்றார்கள்.

ஐந்தாம் நாளில் திரு.தகவலுழவன்  11 ஆண்டுகளுக்கு மேலாக விக்கித் திட்டங்களில் பங்களிப்புச் செய்பவர்கள். அவர்கள்   விக்சனரி & பொதுவகம்  என்பதை விளக்கி நமக்குத் தந்திருக்கிறார்கள்.

ஆறாம் நாளில் திரு. பாலாஜி அவர்களும் விக்கித்தரவு பற்றித் தெளிவாகப் பயிற்சியளித்தார்கள் என்பதை அறிவேன்.

இன்று ஏழாம் நாள் பயிற்சியில் நம்மோடு பங்களிப்புச் செய்பவர் திரு. நீச்சல்காரன். இவர் கனடா இலக்கியத் தோட்ட விருதாளர் என்பது மகிழ்ச்சிக்குரியது.  இவர் விக்கித் தொழில்நுட்பம் குறித்துப் பயிற்சியளித்துள்ளார்கள்.

இவ்வாறு விக்கித்திட்டங்களைப் பேசிய நிகழ்வு தமிழ்நாட்டிலே முதல்முறை என்று கூறலாம்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)