விக்கிமூலம் மெய்ப்புத் திருத்தப் போட்டி
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் கணினி அறிவியல் துறையும் இணைந்து கணித்தமிழ்ப் பேரவையின் மூலமாக விக்கித்திட்டம் பயிற்சி ஏற்பாடு செய்யப் பெற்றது. அதில் பயிற்சி பெற்று, இந்திய அளவில் நிகழ்ந்த மெய்ப்புத் திருத்தப் போட்டியில் நம் கல்லூரி மாணவியாகிய செல்வி பவித்ரா கண்ணன் (II B.Sc IT) அவர்கள் கலந்து கொண்டார். இப்போட்டி கடந்த 01.11.2020 முதல் 15.11.2020 வரை நிகழ்ந்தது. இதில் 12 மொழிகள் கலந்து கொண்டன. அப்போட்டியில் கலந்து கொண்ட மொத்தப் பங்கேற்பாளர்கள் மொத்தம் 280 நபர்கள். இப்போட்டிக்கான பரிசை இந்திய அளவிற்கும் அவரவர் மொழியினர்க்கும் தனித்தனியே அறிவித்திருந்தனர். இத்தகுப் போட்டியில் இந்திய அளவில் மூன்றாம் பரிசையும் தமிழ் மொழியில் இரண்டாம் பரிசையும் பெற்றார். இம்முயற்சியையும் வெற்றியையும் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள், அனைத்துத் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி, மிகுந்த மனமகிழ்வோடு வாழ்த்துக்களை அம்மாணவிக்குத் தெரிவித்தார்கள். இவரால் மொத்தம் 4102 பக்கங்கள் மெய்ப்புத் திருத்தப் பெற்றது என்பது பெருமைப்படத்தக்கது ஆகும்.
Comments
Post a Comment