வலைப்பூ உருவாக்கமும் மின் உள்ளடக்க மேம்பாடும் (Blog Creation and E-Content Developing)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் கணித்தமிழ்ப் பேரவை நிறுவுவதற்காகச் சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நிதி உதவியை நாடியது. அந்நிறுவனமும் ஆதார நிதியாக ரூபாய் 25,000-த்தை வழங்கினார்கள். அதன்படி மாணவர்களின் கணித்தமிழ் அறிவை மேம்படுத்துவதற்கு முதல்நிலையாக வலைப்பூ உருவாக்கமும் மின் உள்ளடக்க மேம்பாடும் (Blog Creation and E-Content Developing) எனும் பொருண்மையில் 4.6.2020 முதல் 10.6.2020 வரை வலைப்பூ பயிற்சி ஏற்பாடு செய்யப்பபெற்றது. அதன் முதல் நாள் நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் தமிழுக்கு நிகழவேண்டும் என்று கூறி மாணவர்களை ஆற்றுப்படுத்தினார்கள். அதேபோல் இறுதி நாள் நிகழ்வில் மாணவர்களின் வலைப்பூ உருவாக்கத்தைக் கண்டும் அதன் பதிவுகளைப் பார்வையிட்டும் மாணவர்களைத் தங்களது நண்பர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். இந்நிகழ்வைக் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் ஏழு நாட்கள் ஒருங்கிணைத்தும் பயிற்சியும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்வமுடன் மாணவர்கள் கலந்துகொண்டு வலைப்பூ உருவாக்கி தமிழில் இடுகைகள் எழுதி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)