விக்கித் தொழில்நுட்பம்
விக்கித்திட்டங்களில் எழுதும் முறை நாள்-07(23.08.2020)
............
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் விக்கித் திட்டங்களில் எழுதும் முறை பற்றிய பயிலரங்கம் ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தின் இறுதி நாள் வகுப்பான இன்று செல்வன் அ.ஆர்லின் ராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்களும் பயிலரங்கிற்கான வாழ்த்துரையை வழங்கினர். செல்வி சி.ரேஷ்மா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்கள். இன்றைய சிறப்பு விருந்தினர் மற்றும் பயிற்றுநருமான விக்கிமீடியர் திரு.நீச்சல்காரன் அவர்கள் விக்கித்திட்டங்கள் மற்றும் விக்கி தொழில்நுட்பங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார். மேலும் பகுப்பு, வார்ப்புரு, உரலி சுருக்கி (URL shorter)விக்கிப்பீடியா கருவிகள், நிரல்கள், விக்கி உருமாற்றி, இடைவெளி கண்டுபிடிப்பான் (Gap finder) பற்றிய விவரங்களுக்குச் செயல்முறை வாயிலாக விளக்கம் அளித்தார். இன்றைய பயிலரங்கு வகுப்பில் 40 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இன்றைய பயிலரங்க வகுப்பைச் செல்வி த.தாரணி அவர்கள் முறையே தொகுத்து வழங்க, முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் நன்றியுரை நவில பயிலரங்க இறுதி நாள் வகுப்பு இனிதே நிறைவுற்றது. இறுதி வகுப்பான இன்று விக்கிமீடியா மூத்த பயனர்களான பயிற்றுநர்களும் பங்கேற்பாளர்களும் தங்களுடைய பின்னூட்டங்களைப் பதிவு செய்தனர். இப்பயிலரங்கை பேரா.கு.இராமஜெயம் & முனைவர் த.சத்தியராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
எழுத்தாக்கம்:
செல்வன் நா.மணிகண்டன்.
இரண்டாமாண்டு,
இளங்கலை வணிகம்(கணினிப் பயன்பாடுகள்).
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
Comments
Post a Comment