வீக்கிப்பீடியா அறிமுகம்

விக்கித்திட்டங்களில் எழுதும் முறை நாள்-02(18.08.2020)
............

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் விக்கித் திட்டங்களில் எழுதும் முறை பற்றிய பயிலரங்கம் ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தின் இரண்டாம் நாள் வகுப்பான இன்று செல்வன் நா.மணிகண்டன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.விக்கிமீடியர் நீச்சல்காரன் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார்கள்.இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் பயிற்றுநருமான நமது விக்கிமீடியர் ஸ்ரீதர் ஐயா அவர்கள்  விக்கிமூலத்தின் முதல் பக்கம், அண்மைய மாற்றங்கள், பயனர் பக்கம், அறிவிப்புகள், பேச்சு மற்றும் மணல் தொட்டி பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார். மேலும்,பிற மொழிக் கட்டுரைகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது எவ்வாறு என்றும், விக்கிமூலத்தின் மணல்தொட்டியில் கட்டுரைகளை முலத் திருத்தம் செய்வது (Source Editing) மற்றும் காட்சித் திருத்தம் (Visual Editing) செய்வது பற்றிய விவரங்களுக்குச் செயல்முறை வாயிலாக விளக்கம் அளித்தார். இன்றைய பயிலரங்கு வகுப்பில் 90 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இன்றைய பயிலரங்க வகுப்பைச் செல்வன் நா.மணிகண்டன் அவர்கள் முறையே தொகுத்து வழங்க, பேராசிரியர் கு.இராமஜெயம் அவர்கள் நன்றியுரை நவில இரண்டாம் நாள் பயிற்சி இனிதே நிறைவு பெற்றது. இப்பயிலரங்கை பேரா.கு.இராமஜெயம்  &  முனைவர் த.சத்தியராஜ்  ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

எழுத்தாக்கம்:
செல்வன். நா.மணிகண்டன்.
இரண்டாமாண்டு,
இளங்கலை வணிகம்(கணினிப் பயன்பாடுகள்).
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)