விக்கிப் பன்முகம்
விக்கித்திட்டங்களில் எழுதும் முறை நாள்-04(20.08.2020)
............
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் விக்கித் திட்டங்களில் எழுதும் முறை பற்றிய பயிலரங்கம் ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தின் நான்காம் நாள் வகுப்பான இன்று செல்வி த.தாரணி அவர்களால் வரவேற்புரை வழங்கப்பெற்றது. செல்வி சி.ரேஷ்மா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார்கள்.இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் பயிற்றுநருமான நமது விக்கிப்பீடியர் திரு.நா.ரெ.மகாலிங்கம் அவர்கள் விக்கிப்பீடியாவின் பன்முகம் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார். மேலும், கட்டுரைகளை எளிமையாக எழுதுவது எவ்வாறு?, கட்டுரையை இணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், புள்ளி விவரம் சரிபார்த்தல், பயனர் பக்கத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது எவ்வாறு?, ஆங்கிலக் கட்டுரையை தமிழ்க் கட்டுரையுடன் இணைத்தல் மற்றும் புதிய கட்டுரை தொடங்குதல் பற்றிய விவரங்களுக்குச் செயல்முறை வாயிலாக விளக்கம் அளித்தார். இன்றைய பயிலரங்கு வகுப்பில் 41 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இன்றைய பயிலரங்க வகுப்பைச் செல்வி த.தாரணி அவர்கள் முறையே தொகுத்து வழங்க, செல்வன் அ.ஆர்லின் ராஜ் அவர்கள் நன்றியுரை நவில நான்காம் நாள் பயிற்சி இனிதே நிறைவுற்றது. இப்பயிலரங்கை பேரா.கு.இராமஜெயம் & முனைவர் த.சத்தியராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
எழுத்தாக்கம்:
செல்வன் நா.மணிகண்டன்.
இரண்டாமாண்டு,
இளங்கலை வணிகம்(கணினிப் பயன்பாடுகள்).
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
Comments
Post a Comment