விக்கிமூலம் அறிமுகம்
விக்கித்திட்டங்களில் எழுதும் முறை நாள்-01(17.08.2020)
............
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் விக்கித் திட்டங்களில் எழுதும் முறை பற்றிய பயிலரங்கம் ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தின் முதல் நாள் வகுப்பான இன்று பேராசிரியர் கு.இராமஜெயம் அவர்களால் வரவேற்புரை வழங்கப்பெற்றது. இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை வழங்கி இன்றைய நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். செல்வி த.தாரணி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார்கள்.. இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் பயிற்றுநருமான நமது மூத்த விக்கிப்பீடியர் திருமதி பார்வதி ஸ்ரீ அவர்கள் விக்கிப்பீடியா பற்றிய திட்டங்கள் அதன் பயன்கள், விக்கிப்பீடியாவில் பயனர் பங்களிப்பு பற்றியும், பயனர்கள் பயன் பெறுவது பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். மேலும், விக்கிமூலத்தில் பயனர் கணக்குத் தொடங்குவது எவ்வாறு என்பது பற்றியும், மூலநூல்களைச் சரிபார்த்து மெய்ப்புப் பார்க்கும் விவரங்களையும், எவ்வாறு மெய்ப்புப் பணிகளை மேற்கொள்வது என்பது பற்றிய விவரங்களுக்குச் செயல்முறை வாயிலாக விளக்கம் அளித்தார். இன்றைய பயிலரங்கு வகுப்பில் 90 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இன்றைய பயிலரங்க வகுப்பைச் செல்வன் ஆர்லின்ராஜ் அவர்களால் முறையே தொகுத்து வழங்க, செல்வன் மணிகண்டன் அவர்கள் நன்றியுரை நவில முதல் நாள் பயிற்சி இனிதே நிறைவு செய்யப்பட்டது. இப்பயிலரங்கை பேரா.கு.இராமஜெயம் & முனைவர் த.சத்தியராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
எழுத்தாக்கம்: நா.மணிகண்டன்
II வணிகம் (கணினிப் பயன்பாடு)
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
Comments
Post a Comment