விக்கிப் பொதுவகம் & விக்சனரி

விக்கித்திட்டங்களில் எழுதும் முறை நாள்-05(21.08.2020)
............

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் விக்கித் திட்டங்களில் எழுதும் முறை பற்றிய பயிலரங்கம் ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தின் நான்காம் நாள் வகுப்பான இன்று செல்வி சி. ரேஷ்மா தொகுத்து வழங்கினார். செல்வன் அ. ஆர்லின்ராஜ்  அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார்கள்.இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் பயிற்றுநருமான நமது விக்கிப்பீடியர் ஐயா தகவல் உழவன் அவர்கள்  விக்கிப்பொதுவகம் பற்றியும் விக்சனரி பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். மேலும் விக்கிப் பொதுவகத்தின் பயன்பாடு மற்றும் விக்சனரி பற்றிய விவரங்களுக்குச் செயல்முறை வாயிலாக விளக்கம் அளித்தார். அது மட்டுமல்லாது பல்வேறு விக்கிமீடியா திட்டங்களைப் பற்றியும் விரிவாகக் கூறினார்.  இன்றைய பயிலரங்கு வகுப்பில் 40 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இன்றைய பயிலரங்க வகுப்பைச் செல்வி சி.ரேஷ்மா அவர்கள் முறையே தொகுத்து வழங்க, செல்வன் அ.ஆர்லின் ராஜ் அவர்கள் நன்றியுரை நவில ஐந்தாம் நாள் பயிற்சி இனிதே நிறைவுற்றது. இப்பயிலரங்கை பேரா.கு.இராமஜெயம்  &  முனைவர் த.சத்தியராஜ்  ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

எழுத்தாக்கம்:
செல்வன் ஆர்லின் ராஜ் ஆ
இரண்டாமாண்டு,
இளங்கலை வணிகம்(கணினிப் பயன்பாடுகள்).
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)