வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி நாள்-4 (05.07.2020)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, குழுவுக்கு ஒரு பயிற்றுநர் மூலம் இன்று பயிற்றுவிக்கப்பட்டது. இன்றைய பயிலரங்கு வகுப்பில் 70 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். நான்காம் நாள் பயிற்சியில் வலைப்பூவில் கருப்பொருள் அமைத்தல்(Theme customization),கருப்பொருள் தளவமைப்பு (Theme layout),பின்புலம்(Theme background), வலைப்பூ பக்க அளவுகள்(Blog width),கெட்ஜெட் உருவாக்குதல்(Insert and Create Gadzets),கருத்துரையிடுதல் (comment),கருத்துரை பெறுதல் (receive a comment),கருத்துரை வெளியிடுதல் மற்றும் அழித்தல் (Publish and Delete a Comment) போன்றவற்றைப் பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது. இப்பயிலரங்கை முனைவர் த.சத்தியராஜ் & திருமதி கு.இராமஜெயம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)