வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி நாள்-3 (04.7.2020)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, குழுவுக்கு ஒரு பயிற்றுநர் மூலம் இன்று பயிற்றுவிக்கப்பட்டது. இன்றைய பயிலரங்கு வகுப்பில் 70 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். மூன்றாம் நாள் பயிற்சியில் வலைப்பூ இடுகைகள் உருவாக்குதல்(post creating), சுட்டி இணைப்புத் தருதல் (insert link), தடிமணாக்குதல் (bold), சாய்வெழுத்தாக்குதல் (italic), அடிக்கோடிடுதல் (underline), ஒளிப்படம் உள்ளிடுதல் (insert video and insert image), தேடுபொறி அமைத்தல் (search description), தலைப்பு (lable), வெளியிடுதல் (publishing), இற்றைப்படுத்தலும் பதிவிடுதலும் (update and publish), பகிர்தல் (share post via whats app and e-mail), முன்பார்வையிடுதல் (pre-view) போன்றவற்றைப் பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது. இப்பயிலரங்கை முனைவர் த.சத்தியராஜ் & திருமதி கு.இராமஜெயம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)