வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி நாள்-07(18.07.2020)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, குழுவுக்கு ஒரு பயிற்றுநர் மூலம் இன்று பயிற்றுவிக்கப்பட்டது. இன்றைய பயிலரங்கு வகுப்பில் 70 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். பயிலரங்க இறுதி நாள் (ஏழாம் நாள்) பயிற்சியில் வலைப்பூவைக் கூகுள் தேடல் பணியகத்தில் (Google search console) இணைப்பது பற்றிய வகுப்புகள், இரு வகையான உரிமை சரிபார்ப்பு (Ownership verification)
1. URL verification
2. HTML tag verification பற்றியும் வலைப்பூவின் வரைபடத்தைச் (Sitemap) சமர்பித்தல் பற்றியும் கூகுள் தேடல்  பணியகத்தில்  வலைப்பூவை எவ்வாறு அட்டவணை படுத்துவது (how to indexing a Blog in google search console?) மற்றும் கூகுள் பகுப்பாய்வு குறியீட்டை இணைத்தல் (Adding a TR CODE with the help of google analytic) வலைப்பூ மூலம் எவ்வாறு ஆட்சென்ஸ்(google adsence) பெறுவது பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது. இன்றைய இறுதி நாள் வகுப்பில், நமது மதிப்பிற்குரிய முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் இன்றைய வகுப்பில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்கள் பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ் & கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர்களுக்குத் தனது வாழ்த்துக்களை வழங்கி சிறப்பித்தார். இப்பயிலரங்கை முனைவர் த.சத்தியராஜ் & திருமதி கு.இராமஜெயம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Comments

Popular posts from this blog

பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள்

மின்னூல் உருவாக்கம்

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)