வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி நாள்-06(12.07.2020)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவிபெற்று, கணித்தமிழ்ப் பேரவை நிறுவி அதன் மூலம் வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, குழுவுக்கு ஒரு பயிற்றுநர் மூலம் இன்று பயிற்றுவிக்கப்பட்டது. இன்றைய பயிலரங்கு வகுப்பில் 70 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.ஆறாம் நாள் பயிற்சியில் வலைப்பூவில் தனியுரிமைக் கொள்கை(Privacy ஆலோசனைகள் மற்றும் நிபந்தனைகள்(Terms&Conditions) போன்றவற்றை உருவாக்குவது பற்றிய வகுப்பு GENERATOR(Privacy policy/Disclaimer/Terms and Conditions) மூலம் செயல்முறை வகுப்பாக எடுக்கப்பட்டு அவற்றை வலைப்பூவில் சேர்ப்பது பற்றிய வகுப்புகளும் காப்புரிமை பற்றிய வகுப்பு SEO tool எனும் இணைய செயலி மூலம் எடுக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது. இப்பயிலரங்கை முனைவர் த.சத்தியராஜ் & திருமதி கு.இராமஜெயம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
Comments
Post a Comment